போலீஸ் ஸ்டேசனில் பயங்கரம்! துடிக்க துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞர்! காரணம் எஸ்ஐ..! அதிர வைத்த தீர்ப்பு!

லாக்கப்பில் வைத்து சையது முகமதுவை என்கவுன்டர் செய்த வழக்கில் எஸ்.ஐ காளிதாஸ்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த காட்டு பாவா ராவுத்தரின் மகன் செய்யது முகம்மது. இவர் ஸ்டேஷன் அருகே மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். ஒரு விசாரணைக்காக 2014 ஆம் ஆண்டு செய்யது எஸ்.பி பட்டினம் காவல்நிலையத்திற்குள் செய்யது அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

அப்போது செய்யதுவை எஸ்.ஐ காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். விசாரித்துக்கொண்டு இருந்தபோது செய்யது கத்தியால் குத்த வந்ததால் தற்காப்பிற்காக சுட்டதாக காளிதாஸ் தெரிவித்தார்.  

இது குறித்து வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கிற்கு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், செய்யது திட்டமிட்டு கொலை செய்ததாகவும், இது நிரூபிக்கப்பட்டதால் களிதாஸுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.