இனிமே மரத்தை வெட்ட மாட்டோம், நிருபரை வெட்டுவோம்! சபாஷ் ராமதாஸ் அன்புமணிக்கு தண்ணி காட்டிய பத்திரிகையாளர்கள் மீது இன்று தன்னுடைய அத்தனை வன்மத்தையும் கொட்டியிருக்கிறார் பா.ம.க. தலைவர் ராமதாஸ்.
நாய்கள்! கம்மனாட்டிகள்! சண்டாளனுங்கக! செய்தியாளர்களை மிரட்டிய ராமதாஸ்!

தமிழ் அடைப்பாளிகள் பேரியக்கம் நடத்தும் கருத்தரங்கில் பேசிய ராமதாஸ், பழைய கதைகளைச் சொல்வது போன்று பத்திரிகையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேவலமாகத் திட்டியிருக்கிறார். டெலிகிராப் என்ற பத்திரிகை நிருபர் மரம் வெட்டியது குறித்து கேள்வி கேட்டாராம். அதற்கு நான் நூறு முறை பதில் சொல்லிவிட்டேன் என்று சொன்ன பிறகும் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்றால், ராமதாஸ் என்றால் மரம் வெட்டி என்று மக்கள் மனதில் பதிய வைக்க நினைக்கிறார்கள்.
இனி, நாங்கள் மரத்தை வெட்ட மாட்டோம், இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களைத்தான் வெட்டுவோம் என்று தெனாவெட்டாகப் பேசியிருக்கிறார். ராமதாஸ்ன்னா மரம் வெட்டி.. ஏன்டா நாய்களா, கம்மனாட்டி பசங்களா, நான் எவ்வளவு மரத்தை வைச்சிருக்கோம்னு வந்து பார்த்து எழுதுங்கடான்னு சொன்னா, எவனும் செய்றதில்லை என்று தெனாவெட்டாகப் பேசியிருக்கிறார்.
தமிழகத்தின் மூத்த தலைவர் ஒருவருக்கு தேர்தல் தோல்வியால் பித்தம் கலங்கிவிட்டதா என்பதுதான் அத்தனை பத்திரிகையாளர்களின் கேள்வி. ஏனென்றால், இதுவரை இத்தனை அனுபவம் வாய்ந்த ராமதாஸ் இப்படி பேசுகிறார் என்றால்... உண்மையில் அவர் நிலைமை பரிதாபம்தான்.