மிரட்டும் சிபிஐ! ராமதாஸ்க்குத் தேவை மாநிலங்களவை பதவியா? மக்களா?

எட்டுவழிச் சாலை விவகாரத்தில் எப்போதும் மக்களின் பக்கம்தான் பா.ம.க. நிற்கும் என்று ராமதாஸ் வீராவேசம் காட்டினார். ஆனால், அவர் முன்புதான் நிதின் கட்கரி எட்டு வழிச்சாலை வந்தே தீரும் என்று பேசிவிட்டுப் போனார். எடப்பாடியும் ராமதாஸும் கப்சிப்.


இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு தமிழக அரசு போய்விட்டது. திங்களன்று இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வரும் நிலையில், ராமதாஸ் என்ன பேசப் போகிறார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

ஏனென்றால், இப்போது ஆளும் அ.தி.மு.க.வையும், மத்திய அரசையும் எதிர்த்து குரல் கொடுத்தால், அடுத்து ராஜ்யசபா சீட் கிடைக்காது. மகனை டெல்லிக்கு அனுப்ப முடியாது. அன்புமணி அங்கே போகவில்லை என்றால் சி.பி.ஐ. இங்கே வந்துவிடும்.

அதனால், என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார் ராமதாஸ். இந்த நேரத்தில் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தவேண்டும் என்று ராமதாஸை இழுத்து வருகிறார்கள். அய்யா வருவாரா என்று கேட்டால், அவர் நிச்சயம் வர மட்டார். அவரைப் பற்றி தெரியும் என்றே கட்சியினர் சொல்கிறார்கள்.

ராமதாஸ்க்குத் தேவை பதவிதான், மக்கள் அல்ல என்று கட்சியினருக்கு நன்றாகவே தெரியும், ஆனாலும் நூல் விட்டுப் பார்க்கிறோம் என்கிறார்கள். நல்ல கட்சிய்யா..