ரஜினிக்கு காத்திருக்கும் ராமதாஸ்..! வெளிப்படையாக சொல்ல வெட்கப்படுகிறாராம்.

சினிமாக்காரர்கள் என்றாலே ராமதாஸ்க்கு கடுமையாக கோபம் வரும். அவர் மட்டுமின்றி சின்ன அய்யா என்று அன்புடன் அழைக்கப்படும் அன்புமணியும் நடிகர்கள் சிகரெட் குடித்தால் மட்டும் கோபப்படுவார்.


இந்த நிலையில், ரஜினியை அன்புமணி சந்தித்துப் பேசினார். கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கும் என்று பரபரப்பு செய்தி பரவியது. இதையடுத்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் கூட்டு வைப்பீர்களா என்று கேட்டபோது, அய்யா சிரித்தபடியே ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் என்று அன்போடு அறிவிக்கிறார். இதுஏ பழைய ராமதாஸாக இருந்தால், ‘கூத்தாடிகளுடன் கூட்டு வைக்கும் அளவுக்கு ராமதாஸ் முட்டாப்பயல் கிடையாது. நாட்டைக் கெடுத்ததே கூத்தாடிகள்தான். அப்படி நான் கூட்டு வைத்தால் என்னை செருப்பால் அடியுங்கள்‘ என்று வீரவசனம் பேசியிருப்பார்.

ஆனால், இப்போது தேர்தல் வருகிறது. எந்தப் பக்கம் எவ்வளவு பணம் வரும் என்று தெரியவில்லை. அதனால், அய்யா அடக்கி வாசிக்கிறாராம்.

எப்படியும் பிழைக்கலாம் என்று முடிவெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு நல் உதாரணமாக மாறிவருகிறார் ராமதாஸ்.