கேப்டன் வீட்டுக்குள் ராமதாஸ் செய்த பண்பாடற்ற செயல்! வைரலாகும் புகைப்பட ஆதாரம்!

நேற்று முதல் முறையாக மருத்துவர் ராமதாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். தேமுதிக அரசியல் இயக்கமாக மாறிய பிறகு விஜயகாந்தை ராமதாஸ் சந்தித்து இருப்பது இதுதான் முதல் முறை.


கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பாமக ஒரே கூட்டணியில் இருந்தன. ஆனால் ராமதாஸ் விஜயகாந்த் இந்த கூட்டணியின் போது சந்தித்துக் கொள்வதே இல்லை. 

தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் ராமதாஸ் விஜயகாந்த் இடையிலான மனவருத்தம் அதிகரித்தது.

இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இடம்பெற்றுள்ளன. கடந்த கால மன மாச்சரியங்களை மறந்து ராமதாஸ் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

அப்போது ராமதாஸ் நடந்து கொண்ட விதம் தான் அவர் பண்பாடு இல்லாதவர் என்று கூறப்படும் நிலைக்கு அவரை ஆளாக்கியுள்ளது. விஜயகாந்த் வீட்டிற்குள் ராமதாஸ் காலனி அணிந்தபடி சென்றது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

தமிழர்களின் பண்பாட்டின் படி விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது கால்களில் காலணி அணிந்திருக்கக் கூடாது. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கூட காலில் காலணி அணியாமல் விஜயகாந்த் வீட்டிற்குள் சென்றனர்.

ஆனால் தமிழர் பண்பாடு பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் ராமதாஸ் மற்றும் காலில் காலணியுடன் விஜயகாந்த் வீட்டிற்குள் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.