பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்!

அரசியல் காரணங்களுக்காக பஞ்சமி நில விவகாரம் குறித்து தப்புத்தப்பாகப் பேசுகிறார் என்று ராமதாஸ்க்கு தி.மு.க.வினர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.


பஞ்சமி நிலம் குறித்து போடப்பட்ட ட்வீட்களை அகற்ற வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள். இன்று வழக்கறிஞர் பாலு, அந்த நோட்டீஸ்க்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், பஞ்சமி நிலம் குறித்து நான் புதிதாக கேள்வி எழுப்பவில்லை. அந்தக் காலத்தில் இருந்து அ.தி.மு.க. கேள்வி எழுப்பியிருக்கிறது. இதில் என்னை மட்டும் ஏன் குறிப்பிட்டு டார்கெட் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இப்போது ஸ்டாலினுடன் இருக்கும் சேகர் பாபு பஞ்சமி நில விவகாரம் குறித்து ஸ்டாலினுக்கு எதிராக போராட்டமே நடத்தியிருக்கிறார். அதனால், முதலில் அவர் மீது நடவடிக்கை எடுங்கள். என் மீது வழக்குப் போட்டு ஆதாயம் தேடப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுள்ளார். 

இன்னமும் ராமதாஸ் அவரது பஞ்சமி ட்வீட்களை அகற்றவில்லை எனும் நிலையில் தி.மு.க. மீண்டும் என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

வேகமா ஏதாச்சும் செய்யுங்க ஸ்டாலின்.