அன்புமணிக்கு மந்திரி பதவிக்காக கூட்டணி மாறும் ராமதாஸ்! மோடி வீட்டில் திடீர் சந்திப்பு!

எந்த ஒரு கட்சியுடனும் நிரந்தரக் கூட்டணி வைப்பது ராமதாஸ்க்கு வழக்கம் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்.


இந்த நிலையில் 10ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பா.ம.க. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வீட்டில் சந்தித்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சீன அதிபர் வருகையை முன்னிட்டு மோடி தமிழகம் வரும் சூழலில், அதற்கு முந்தைய தினம் பிரதமரை சந்தித்தது ஏன் என்பதுதான் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை சந்தித்து வந்த ராமதாஸ், ஏழு பேர் விடுதலைக்காக சந்தித்தேன் என்று கூறியதை மனிதர்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்கே தெரிந்த விஷயம்தான்.

டெல்லி பா.ஜ.க. பக்கம் விசாரித்த வரையில் கிடைத்த தகவல் அதிர்ச்சிகரமானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க.வும், பா.ம.க.வும் தேர்தலை சந்தித்து அவமானமான தோல்வி அடைந்தன.

நடக்க இருக்கும் 2021 சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் ஓர் அணியை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறதாம். அந்தக் கூட்டணியில் முதல் நபராக இணைந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அடுத்த கட்சியாக பா.ம.க.வை இணைத்து உறுதி கொடுத்துவிட்டாராம் ராமதாஸ்.

ஆக, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வும், பா.ம.க.வும் இல்லை என்பதுதான் இன்றைய உறுதியான தகவல்.