ராமதாஸின் நெஞ்சு பொறுக்கவில்லையாம்… ஏன் தெரியுமா?

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எளியோரான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வலியோர் இழைக்கும் அநீயைக் கண்ட போது ’’நெஞ்சு பொறுக்குதிலையே’’ என்ற பாரதியாரின் வரிகள் தான் நினைவுக்கு வந்தன என்று தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.


சரி... இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த போது தான் பாரதிதாசனின் ’கொலைவாளினை எடடா’ பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. அந்தப் பாடலின் சில முக்கியமான வரிகள் மட்டும் உங்கள் சிந்தனைக்காகவும், விழிப்புறுவதற்காகவும்....

வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? 

மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? 

உலகாள உனது தாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! 

அலைமா கடல் கிலம் வானிலுன் அணி மாளிகை ரதமே 

அவையேறிடும் விதமே யுன ததிகாரம் நிறுவுவாய் 

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே 

குகைவாழ் ஒருபுலியே உயர் குணமேவிய தமிழா!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்போது இருந்திருந்தால் இந்தக் கொடுமைக்கு எதிராக என்ன பாடியிருப்பார்? என்று சிந்தியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.