பல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ்.!

வன்னியர்களுக்கு 20 சதவிகித உள் ஒதுக்கீடு கிடைக்கும் வரையிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று கூறிவந்த டாக்டர் ராமதாஸ், திடீரென பல்டி அடித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கடந்த வாரம் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.

அந்த சந்திப்பின் போதும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை விபரங்கள் எதையும் அ.தி.மு.க. தரப்பில் வெளியிடவில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதவில் ‘அமைச்சர்கள் இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக பேசினார்கள்.

கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. மீண்டும் பொங்கலுக்கு பிறகு சந்திப்பதாக கூறி சென்றார்கள். இட ஒதுக்கீடு பிரச்சனை தீர்வு கிடைத்த பிறகே கூட்டணி தொடர்பாக பேசப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால், இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி வருகிற 20-ந்தேதி அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.