ராமதாஸ்க்கு எலுமிச்சம்பழம் வேணுமாம்! சீக்கிரம் கொண்டு போங்கப்பா, எதுக்குன்னு தெரியலையே!

தலைவரை சந்திக்கச் செல்லும்போது வெறும் கையுடன் போகக்கூடாது என்று சால்வை, பூங்கொத்து, மாலை, புத்தகங்கள் கொண்டுசெல்வது வழக்கம். ராமதாஸையும் அப்படித்தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்துவருகிறார்கள்.


இந்த நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்று வித்தியாசமாக உள்ளது. ஆம், அந்த அறிவிப்பில், ‘‘தைலாபுரம் தோட்டத்திற்கு என்னை பார்க்க வருவோர் பழக்கூடை, பூங்கொத்துகள், சால்வைகளை எடுத்து வர வேண்டாம்.

அன்பின் மிகுதியால் ஏதேனும் பரிசுப்பொருள் கொடுத்தே ஆக வேண்டும் என நினைத்தால் ஒற்றை எலுமிச்சை பழம் போதும்.  அதுவும் பழம் எளிமையாக கிடைத்தால் மட்டுமே அதற்காக அலைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திடீரென ராமதாஸ் ஏன் இப்படி எலுமிச்சம்பழம் கேட்கிறார் என்று புரியாமல் பாட்டாளிகள் விழிக்கிறார்கள். இனி எலுமிச்சம்பழம் கொண்டுபோனாலும் தப்பு, கொண்டு போகாவிட்டாலும் தப்பு. என்ன செய்யப் போகிறார்களோ..?