அம்மாடியோவ்! ரூ.500 கோடி! ரஜினி வீட்டு புது மாப்பிள்ளையின் ஒரு வருட வருமானம்!

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷாகன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒரு வருட வருமானம் 500 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.


தொழில் அதிபர் அஷ்வினை 2010ம் ஆண்டு திருமணம் செய்த சவுந்தர்யா, 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதனை தொடர்ந்து தந்தையுடன் போயஸ் கார்டன் வீட்டில் சவுந்தர்யா வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விஷாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எளிய முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், ஜனவரியில் திருமணம் என்றும் பேசப்படுகிறது.

 

   இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் 2வது திருமணத்தை சவுந்தர்யா தற்போது வரை மறுக்கவில்லை. இந்த நிலையில் சவுந்தர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷாகன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷாகனும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவரது முதல் மனைவி தினகரன் பத்திரிகையின் உரிமையாளராக இருந்த கே.பி.கந்தசாமியின் பேத்தி கனிகா. அதாவது கே.பி.கே.குமரனின் மகள்.

  

   திருமணம் ஆகி கனிகா – விஷாகன் தம்பதி இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே விவகாரத்து செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து விஷாகனின் முன்னாள் மனைவி தொழில் அதிபர் வருண் மணியனை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த வருண் மணியன் தான் நடிகை த்ரிஷாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்து பின்னர் அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.

 

   முன்னாள் மனைவி திருமணம் செய்து கொண்ட நிலையில் விஷாகனும் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். சவுந்தர்யாவுடன் படவிழா ஒன்றில் கலந்து கொண்ட போது விஷாகனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அது காதலாக மாறிய நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே விஷாகன் சினிமாவில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். வஞ்சகர் உலகம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

   ஆனாலும் தந்தையின் மருந்து நிறுவனங்களையும் விஷாகன் கவனித்து வருகிறார். இந்த மருந்து நிறுவனங்களின் ஒரு வருட வருமானம் எப்படியும் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர வேறு பல்வேறு தொழில்களிலும் விஷாகன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.