6 வயது இளையவருடன் 2வது திருமணம்! ரஜினி மகளின் திடீர் முடிவு! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தன்னை விட ஆறு வயது இளையவரான 28 வயது இளைஞரை 2வதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினி – லதா தம்பதியரின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஆஸ்திரேலியாவில் கல்லூரி படிப்பை முடித்த இவர் அமெரிக்காவில் கிராபிக்ஸ் பணிகளில் நிபுணத்துவம் பெற்றார். சென்னையில் ஆக்கர் ஸ்டூடியோ என்ற பெயரில் திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவே சவுந்தர்யா திரைப்பட தயாரிப்பாளர் ஆனார்.

   வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா என்கிற படத்தை சவுந்தர்யா தயாரித்தார். படம் மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த சவுந்தர்யா ரஜினியை வைத்து 3டி அனிமேசன் முறையில் கோச்சடையான் படத்தை இயக்கினார். இந்த படமும் கமர்சியலாக படு தோல்வி. இதற்கு இடையே கடந்த 2010ம் ஆண்டு சவுந்தர்யா அஸ்வின் என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   சவுந்தர்யா – அஸ்வின் ஜோடிக்கு 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே சவுந்தர்யா தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவகாரத்து பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சென்னை போயஸ் கார்டனில் தந்தை ரஜினி வீட்டில் சவுந்தர்யா வசித்து வருகிறார்.  இதற்கு இடையே சவுந்தர்யாவின் முன்னாள் கணவர்அஸ்வின் வேறு ஒரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

   இதனால் சவுந்தர்யா தானும் 2வது திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வணங்கா முடி என்பவருடைய மகன் விசாகனுடன் சவுந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலான நிலையில் சவுந்தர்யா – விசாகன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்கு நடிகர் ரஜினியும் பச்சை கொடி காட்டியுள்ளார்.

   தற்போது திருமண வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்ற.ன இதற்கு இடையே தற்போது 34 வயதாகும் சவுந்தர்யா விசாகனை விட 6 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது. சவுந்தர்யாவின் சகோதரியான ஐஸ்வர்யாவும் தன்னை விட இளையவரான தனுசை திருமணம் செய்து கொண்டார். அந்த வழியில் அக்காவை பின்பற்றி தங்கயைன சவுந்தர்யாவும் தன்னை விட வயதில்இளையவரை திருமணம் செய்து கொள்கிறார்.For More NEWS CLICK BELOW LINK

TIMES TAMIL

TIMES TAMIL TWITTER PAGE

TIMES TAMIL FACEBOOK PAGE