தமிழகத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி துவங்கி ஒன்றரை வருடமான நிலையில், கட்சியின் அடி மட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ரஜினி காந்த் முதல்வராக சிறப்பு யாகம்...
மாவட்ட ரீதியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த இருத் தேர்தலிலும் ரஜினி காந்த் கட்சி சார்பாக போட்டியிடவில்லை.
இதற்க்கிடையில், கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சி துவங்கி கடந்த தேர்தலில் கனிசமான வாக்குகள் பெற்றது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தகட்டமாக திரைப்படங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சிதம்பரம் வந்த ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ், அவரது மருமகனும் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற செயலாளருமான சந்திரகாந்த் உள்ளிட்டோர் நடிகர் ரஜினி காந்த் அரசியல் பயணம் சீராக அமையவும், 2021 ஆம் ஆண்டின் தேர்தலில் முதல்வராக வேண்டியும் சிறப்பு சாந்தி யாகம் நடத்தினர்.
ரஜினி காந்த் உடல் நலனிற்க்காவும், அவரது அரசியல் வாழ்விற்க்காவும் நடத்தபட்ட இந்த யாகத்தில் 11 தீட்சிதர்கள் முன்னிலை யில் சாந்தி யாகம் மேற்க்கொள்ளபட்டதாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.