தர்பார்! 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி எடுக்கும் விஸ்வரூப அவதாரம்!

சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு தர்பார் திரைப்படத்தில் ரஜினி புதிய அவதாரம் ஒன்றை எடுக்கிறார்.


நடிகர் ரஜினி குஷ்பு நடிப்பில் பாண்டியன் திரைப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். அதன் பிறகு ரஜினி எந்தப் படத்திலும் போலீசாக நடிக்கவில்லை.

இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் படப்பிடிப்பு துவங்கியுள்ளார் தர்பாரில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அதிலும் ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். மும்பையில் நடைபெறும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் நிழல் உலக தாதாக்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மிகுந்த காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார்.

1982ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான மூன்று முகம் திரைப்படத்தில் அலெக்ஸ்பாண்டியன் என்கிறார் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடித்திருப்பார். தற்போது வரை தமிழ்த் திரையுலகில் காவல்துறை அதிகாரி வேடம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அந்த அலெக்ஸ்பாண்டியன் கேரக்டர்தான். அதே போன்றதொரு கேரக்டரில் தர்பார் திரைப்படத்தில் ரஜினி நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.