ரஜினி மன்றத்தினர் பிட் நோட்டீஸோட வர்றாங்க... புரட்சியைத் தூண்டுறாங்க. பிடிங்க போலீஸ்.

எப்போது புரட்சி வருகிறதோ, அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். இதனை எந்த ஒரு மாவட்டச் செயலாளரும் ஏற்கவே இல்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.


அதாவது, ரசிகர்கள் ஊர் ஊராய் போய், ரஜினிகாந்த் சொல்லியிருக்கும் மூன்று கொள்கைகளையும் நோட்டீஸ் அடித்து கொடுக்க வேண்டுமாம். அப்போது பொதுமக்களின் ரியாக்ஷன் என்ன, புரட்சிக்கு சரிப்பட்டு வருவார்களா என்று பார்க்க வேண்டுமாம். 

அப்படி, ஏதாவது ஒரு ஊரில் மக்கள் அனைவரும் ரஜினிக்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிந்தால், அந்த ஊரை ரஜினிக்கு ஆதரவு ஊர் என்று குறித்துக்கொள்ள வேண்டுமாம். இப்படி தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றத்தினர் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார் ரஜினி.

இதைக் கேட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினர் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். பிட் நோட்டிஸ் அடிப்பதும் கொடுப்பதும் சரி, அதை ஒவ்வொருவரிடமும் கொடுத்து அவருடைய விமர்சனத்தைக் குறிக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் ஐந்து வருடங்கள் இதற்காகவே வேலை பார்க்க வேண்டும்.

இதற்கெல்லாம் யார் பனம் கொடுப்பது? அப்படியே வேலை செய்தாலும் அடுத்து தேர்தலில் எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு இல்லை எனும்போது எதற்காக இந்த வேலையை நாங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

சபாஷ், சரியான கேள்வி.