பரபரப்பான நேரத்தில் நடிகர் இரஜினிகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்கத் தொடங்கினார்.

“நான் 2017 டிச. 31 அன்றுதான் அரசியலுக்கு வருவதாகத்தான் சொன்னேன். அதற்கு முன்னர் இது பற்றிக் கேட்டபோது, ஆண்டவந்தான் முடிவுசெய்யணும் என்றேன். 96ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக அரசியலில் இழுபட்டது.


“ அப்போதிருந்து அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பிச்சேன். 2016-ல் செயலலிதாம்மா இறந்து 2017-ல் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாம ஆனபோது, முதல்முதல்ல அரசியலுக்கு வர்றதா சொன்னேன்.

“ அப்போ சொன்னேன், இந்த அமைப்பு முறை சரியில்ல. அதச் செய்யாம அரசியலுக்கு வந்தா, மீன் குழம்பு வச்ச பாத்திரத்தில சர்க்கரைப் பொங்கல் வச்சா எப்படி இருக்கும்.. அதப்போல இருக்கும்.

“ மூன்று திட்டங்கள் எனக்கு வச்சிருந்தேன். திமுக, அதிமுக முக்கிய கட்சிகள். 50 ஆயிரத்துக்கும் மேல கட்சிப் பதவிகள் இருக்கு. தேர்தல் நேரத்துல அவங்க தேவை. தேர்தல் முடிஞ்ச பிறகு அந்தப் பதவிகள் தேவை இல்ல. ஆட்சிக்கு வந்தபிறகு அவங்க ஆளும்கட்சினு டெண்டர் பலதுல இருக்காங்க.

“ தேர்தல் நேரம் தவிர்த்து மற்ற நேரத்துல அந்தப் பதவிகள மட்டும் வச்சிக்கலாம். இதுதான் முதல் மாற்றம்.

“இப்போ ரெண்டாவது, சட்டமன்றத்துல எல்லாரும் 50, 55 வயது ஆளுங்க. 55 வயதுக்கு கீழ இருக்கிறவங்க 65 சதவீதம் பேர்... அந்தந்தப் பகுதியில கம்பீரமா, கண்ணியமா இருக்கிறவங்களுக்கு சீட் கொடுக்கப்போறேன். மீதமுள்ளவங்க 35 சதவீதம்...

“ ஐஏஎஸ், நீதிபதிகள், பெண்களை எல்லாம் சேத்து சட்டமன்றத்துல போயி அதிகாரத்தைக் கையில எடுத்துக்கணும்.

“ மூணாவது, இந்தியாவில தேசியக் கட்சிகளத் தவிர ஆட்சிக்கும் கட்சிக்கும் அவர்தான் தலைவர். 5 வருசம் அவன ஒண்ணும் கேட்கமுடியாது. கொள்கைகள்தான் கட்சி... அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தணும். கட்சியின் தலைவர் பதவி சி.இ.ஓ. பதவி.. இரஜினி முதலமைச்சர் பதவிய நினைச்சுப் பாக்கவே முடியாது. மூப்பனார், சிதம்பரம், நரசிம்மராவ், சோ.. கூப்பிட்டாங்க.

”முதலமைச்சர் பதவி ஆசை என் ரத்தத்துல இல்லை..

”தன்மானமுள்ளவனா உட்கார வைப்பான். யார் தப்பு செஞ்சாலும் சுட்டிக்காட்டுவோம். மீறி செஞ்சா தூக்கி எறிவோம். அன்றாட வேலைகள்ல தலையிடமாட்டோம்.

“ முக்கிய விழாக்கள், நிகழ்ச்சிகள்ல கட்சி பாத்துக்கும்.. அதுக்கு ஆட்சியில இருக்கிறவங்க தேவையில்ல..

”தெரிஞ்ச அரசியல் தலைவருங்க, அதிகாரிங்க, நீதிபதிங்ககிட்ட சொன்னேன். அரசியல்ல இருக்கிறவங்க யாரும் ஒத்துக்கல.. மூணாவத ஒத்துக்கவே இல்ல, யாருமே...

“அழகு பாக்கிறது அரசியல்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை. இத மன்றச் செயலாளருங்ககிட்ட சொல்லலாம்.

” ஒரு நல்ல தலைவரை உண்டாக்கணும். அண்ணா எத்தனை தலைவர்களை உருவாக்கினாரு.. இப்போ யார் இருக்கிறாங்க சொல்லுங்க..

” ஒரு பக்கம் அசுரபலத்துடன் திமுக... வாழ்வா சாவா நிர்பந்தம். இன்னொரு பக்கம் குபேரன், கஜானாவை கையில வச்சிகிட்டு ஆட்சியில இருக்கிறாங்க.. 50 ஆண்டு கால ஆட்சிய மாற்ற தமிழக மக்கள்கிட்ட புதிய எழுச்சி வரணும்” என்று இரஜினி பேசினார்.