சமூகவிரோதிகளை அடையாளம் காட்டப் போறார் ரஜினி..! ஆணையம் சம்மன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போது தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், சமூகவிரோதிகள் சிலர் நுழைந்தது தான் துப்பாக்கி சூட்டுக்குக் காரணம், எனக்கு அது தெரியும் என்று சொல்லியிருந்தார். அதனால், அவரை அழைக்கவேண்டும் என்று பலரும் கூறியிருந்தனர். 

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முன்பு வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனை முதலிலேயே செய்திருந்தால், ரஜினி எளிதாக எல்லோரையும் அடையாளம் காட்டியிருப்பார். இத்தனை லேட் ஆகாதுதான்.

ஆனால், இப்போதே ரஜினிகாந்த் சம்மனுக்கு ஆஜராக மாட்டார் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். அன்று அவருக்கு உடல் நலமில்லாமல் போகும் என்கிறார்கள். பார்க்கத்தானே போறோம், ரஜினியோட ஆட்டத்தை!