அரசியலில் நாலு கால் பாய்ச்சல்! ரஜினியை தேடி ஓடி வந்த அதிமுக வேட்பாளர்!

சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பணியில் ரஜினிகாந்த் தீவிரமாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தர்பார் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்தவுடன் ஊர் திரும்பிய ரஜினிகாந்த், அடுத்து 29ம் தேதி மீண்டும் ஷூட்டிங் போகிறார்.


அதற்கு இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் அரசியல் தொடர்பாக சிலரை சந்திக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி நேற்று அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சொல்லிவந்த ரஜினிகாந்த், இப்போது அப்துல்கலாம் புகழையும் தனது கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்புகிறாராம். அதனால் அப்துல்கலாம் விஷன் இந்தியா பார்ட்டியை நடத்திவரும் பொன்ராஜை சந்தித்துப் பேசினாராம். அப்போது அப்துல்கலாம் பற்றி பல்வேறு தகவல்களை கேட்டு அறிந்திருக்கிறார். 

இதையடுத்து ஏ.சி.சண்முகத்தை சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி. ஏற்கெனவே எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக எப்படி நிர்வாகிகள் நியமனம் செய்வது என்று கேட்டறிந்தாராம்.

ஏற்கெனவே தமிழருவிமணியனை அரசியல் ஆலோசகராக பயன்படுத்தி வருகிறார். அவர் காமராஜர் ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் ஆகிய மூவரும் இணைந்த ஆட்சி தருவதற்கு ஆசைப்படுகிறாராம் ரஜினி.

ஆனால், இந்த இடத்தில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. ஆம், கட்சியில் ஒருசில ரசிகர்களைத் தவிர வேறு யாருக்கும் பதவி கிடையாதாம். முழுக்க முழுக்க நேர்மையாளர்கள், நல்ல நிர்வாகிகள் கையில் மாவட்டப் பதவி கொடுக்கப்படுமாம். அவர்கள் மூலம் நல்லவர்கள் மட்டுமின்றி உள்ளாட்சியில் திறம்பட ஆட்சி நடத்தி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களாம்.

இன்னும் என்னவெல்லாம் திட்டம் வைத்திருக்கிறாரோ ரஜினி?