சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம்… ரஜினியுடன் சேரும் அழகிரி…. அல்லுதெறிக்கும் தி.மு.க.

நிச்சயமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே மாட்டார் என்றுதான் தி.மு.க. நம்பிக்கொண்டு இருந்தது. ஆனால், அவர்களுக்கு மரண பயத்தை காட்டுவது போன்று ரஜினி அரசியல் வருகையை உறுதிபட அறிவித்துவிட்டார்.


ரஜினியின் வருகையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர். ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுவரை தி.மு.க. ரஜினி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கனவு கலைந்துபோனதே என்ற கவலையில் உள்ளனர். 

அரசியல் பிரவேசம் தொடர்பான தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி வெளியிட்டது முதல் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. திமுகவில் ஒதுங்கியிருப்பவர்களும், ஓரங்கட்டப்பட்டவர்களும் ரஜினி பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி இதில் முதல் ஆளாக இருக்கிறார். இந்த அணிமாறல் திமுகவிற்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

மேலும், ஆன்மிக அரசியல் என்று அறிவிப்பு செய்திருப்பதால், ஒட்டுமொத்த இந்து வாக்குகளும் தங்களுக்குக் கிடைக்காதோ என்ற அச்சத்திற்கு தி.மு.க. வந்துவிட்டது. பாவம்தான்.