ஸ்டாலினை சென்னை மேயர் ஆக்கியவர் ரஜினி! சற்று முன் வெளியான டாப் சீக்ரெட்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1996ம் ஆண்டு சென்னை மேயர் ஆக காரணமே நடிகர் ரஜினிகாந்த் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினியின் 70வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ரஜினி 1996ம் ஆண்டிலேயே முதலமைச்சர் ஆகி இருப்பார். 

இதனை நான் சொல்லவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரே கூறியிருக்கிறார். ரஜினியின் புகைப்படத்தை வைத்து தான் ஸ்டாலின் மேயரானார். 1996 உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி புகைப்படத்தை பயன்படுத்தி தான் திமுக பிரச்சாரம் செய்தது. சென்னையில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்டாலினும் ரஜினியின் புகைப்படத்தை பயன்படுத்தினார். 

இதனை எல்லாம் மறந்துவிட்டு திமுகவின் தற்போது ரஜினியை விமர்சித்து வருகின்றனர். ரஜினி கை காட்டினால் போதும் வந்த நிற்க ஒரு கோடி பேர் உள்ளனர்.