ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா! விஸ்வாசம் சாதனையை முறியடிக்க வியூகம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நிதானமாக இன்று பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார். மோடி என்ற தனி மனிதனுக்குக் கிடைத்த வெற்றி என்று உறுதியோடு சொன்னார். அது மட்டுமின்றி, தமிழகத்தில் பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு இருந்த எதிர்ப்பால் தோல்வி அடைந்தது என்றும் சொன்னார்.


அதோடு நில்லாமல் கோதாவரி, கிருஷ்ணா நதி நீர் இணைப்புக்கு எப்போதும் போல் பாராட்டுக்களை அள்ளித்தெளித்தார் ரஜினி. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ரஜினிகாந்த் கண்டிப்பாக சட்டசபைத் தேர்தலுக்கு வந்துவிடுவார் என்றுதான் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

ஆனால், இந்த சந்தோஷத்திற்கு உலை வைப்பது போன்று ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஆம், சிறுத்தை இயக்குனர் சிவா, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கதை சொல்லி, ஓகே வாங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள். கபாலி, காலா படங்களுக்கு முன்னதாகவே சிறுத்தை சிவா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக உறுதி கூறியிருந்தார். அதன்படி, இன்று சிறுத்தை சிவாவுக்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

தர்பார் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைய இருப்பதால், தீபாவளிக்குப் பிறகு சிறுத்தை சிவா படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம் கட்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த சந்திப்பு ரசிகர்களை துவள வைத்திருக்கிறது. கட்சியை அறிவிங்க ரஜினி....