தை பிறந்தாள் வழி பிறக்கும்! பொங்கல் பண்டிகையில் கட்சிப் பெயரை அறிவிக்கிறார் ரஜினி!

பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடிகர் ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.


தமிழக பாஜக தலைவராக ரஜினி நியமிக்கப்பட உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை ரஜினி தரப்பு சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். தமிழக பாஜகவின் தலைவராக தன்னை நியமிக்க உள்ளதாக வெளியான தகவல் கிட்டத்தட்ட ரஜினியை எரிச்சல் அடைய வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் இப்படி இனி தகவல்கள் வரக்கூடாது என்பதற்காக ரஜினி அதிரடியான தகவலை தனது நெருக்கமானவர்களிடம் நேரடியாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அப்போது கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்று யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார் ரஜினி.

இந்த தகவலைத்தான் கடந்த இரண்டு நாட்களாக கராத்தே தியாகராஜன் கூறி வருகிறார். அவர் மார்ச் மாதம் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று சொல்லி வருகிறார். அவர் கூறியபடி மார்ச் மாதம் தான் ரஜினி கட்சி நடவடிக்கைகளை தொடங்க உள்ளாராம். ஆனால் தமிழர்களின் பண்டிகையான பொங்கலின் போது கட்சிப் பெயரை அறிவித்துவிட ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்.

பொங்கலுக்கு கட்சிப் பெயரை அறிவித்துவிட்டு ஏப்ரலில் மாநாடு போட்டு கெத்து காட்டலாம் என்பது தான் ரஜினியின் திட்டமாக இருக்கலாம்.