ரஜினியை பார்க்க ரூ.40 ஆயிரம்! தீவிர ரசிகருக்கு சென்னையில் ஏற்பட்ட விபரீதம்!

சென்னை: ரஜினியை பார்ப்பதற்காக வந்த ரசிகர் ஒருவர் தான் வைத்திருந்த ரூ.40,000 பணத்தை கூட்டத்தில் தொலைத்துவிட்டார்.


சமீபத்தில் சினிமா கதாசிரியர் கலைஞானத்திற்கு, பாரதிராஜா சார்பாக, பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாராட்டிப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரஜினியை நேரில் பார்ப்பதற்காக, பாலகணபதி என்பவர் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற கலைவாணர் அரங்கத்திற்கு வந்திருந்தாராம். 

ஒருவழியாக, கூட்டத்தில் பாலகணபதி போராடி, ரஜினிகாந்த் உடன் தனது மொபைல் ஃபோனில் போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால், அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.40,000 பணம் கூட்டத்தில் தொலைந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிதீவிர ரஜினி ரசிகர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.