மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே..! இதை எல்லாமா அரசியல் ஆக்குவீர்கள்? ஸ்டாலினை சீண்டுகிறாரா ரஜினி!

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் நேர்மையானவர். தன்னுடைய வெற்றிக்குக் காரணம் கடவுள் என்று உறுதியாக நம்புபவர். அதனால்தான் அத்திவரதரை தரிசிக்கும் ஆசையில் ஒரு பொதுஜனம் போன்று அவரும் சென்று தரிசனம் செய்தார்.


ஒருபோதும் ரஜினி மேக்கப் போட்டுக்கொள்வதில்லை. அதனால் கடவுளை தரிசிக்கவும் இயல்பாக வந்து நின்றார். தான் சொன்ன கருத்துக்களை அவர் ஒருபோதும் மறுப்பதும் இல்லை. சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்.

அதனால்தான் நாடெங்கும் அவர் பேசிய காஷ்மீர் பேச்சு பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இன்று போயஸ் கார்டனில் மீண்டும் மீடியாக்களை சந்தித்து உறுதியாக காஷ்மீர் குறித்துப் பேசியிருக்கிறார். தீவிரவாதிகள் வசத்தில் இருந்த காஷ்மீர் விவகாரத்தை, மோடியும் அமித்ஷாவும் ராஜதந்திரமாக செயல்பட்டு மீட்டுள்ளார்கள் என்று மீண்டும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

மேலும் எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதாலே, காஷ்மீர் விவகாரத்தைப் பாராட்டினேன் என்று சொல்லியிருக்கிறார். இது தவிர, தமிழ் படங்களுக்கு விருது கிடைக்காதது வருத்தம் என்றும் கூறியிருக்கிறார். ஆஹா, மறுபடியும் மீடியாக்களில் இந்த விவகாரம்தான் ஓடுமா?

இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை ஏன் இந்திய அளவில் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட கடும் எதிர்ப்பு காட்டி வருவது திமுக தான். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட ஸ்டாலின் கூட்டினார். அந்த வகையில் மதிப்பிற்கு உரிய அரசியல்வாதிகள் என்று ரஜினி கூறியது ஸ்டாலினைத்தான் என்கிறார்கள்.