ஜான்சன்&ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பயன்படுத்தும் ஷாம்புவில் கேன்சரை உண்டாக்கும் கெமிக்கல் உள்ளதாக ராஜஸ்தான் ஆய்வுக்கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜான்சன் அன்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்று நோய் கிருமிகள்! அதிர வைக்கும் ஆய்வு முடிவு!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான சோப்பு மற்றும் ஷாம்புகள் தயாரித்து வருகிறது. இந்நிலையில் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஷாம்பூவில் கேன்சரை உண்டாக்கும் ரசாயனம் இருப்பதாக ராஜஸ்தானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக கண்டெய்னரில் உள்ள ஷாம்பு பாட்டில்களை எடுத்து ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஃபார்மால்டிஹைடு எனும் ரசாயனம் இருப்பதாக கண்டறிந்தனர். இந்த ரசாயனத்தின் தன்மை நிறமற்றதாகவும் அதிக வாசனை தன்மையுடையதாகவும் இதனை கட்டுமானத்துறை மற்றும் மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ரசாயனம் ஆனது மனித உடலில் கேன்சரை உண்டாக்கும் தன்மையுடையது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 2 ரேக்குகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் பாட்டில்களில் ஏதோ ஒன்றை மட்டும் தேர்வு செய்து ஆய்வுக்குட்படுத்திய போது வேதி பொருள் இருப்பதை கண்டறிந்தனர்.
கண்டறியப்பட்ட ரசாயனம் ஆனது BIS விதிகளுக்கு புறம்பானதாக உள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நலன் கருதி அந்த ஷாம்பூ பாட்டில்களை நிராகரித்தனர். எனவே ராஜஸ்தானில் ஜான்சன் அன்ட் ஜான்சனை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. முன்னதாக அமெரிக்காவிலும் ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்களில் புற்று நோய் காரணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.