ஆளுக்கு ஒரு துப்பாக்கி! தலைக்கு ஒரு புல்லட்! காதல் ஜோடியின் அதிர வைத்த முடிவு!

ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் என்ற பகுதியில் காதலர்கள் இருவர் தங்களைத் தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமான பர்மீர் என்ற பகுதியில் பொது இடத்தில் ஒரு காதல் ஜோடி தங்களை தாங்களே சுட்டுக்கொண்டு இறந்து உள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்துசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து விசாரணையை தொடங்கியது காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது இறந்தவர்கள் அஞ்சு சுதர் மற்றும்  சம்கார் சௌத்ரி இருவருக்கும் 21 வயது ஆகிறது.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வளர்ந்த நிலையில் அப்பெண்ணுக்கு அவர்களின் வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே அப்பெண் திரும்பவும் தனது காதலனுடன் பேச ஆரம்பித்துள்ளார். சிலநாட்கள் சென்ற நிலையில் இருவரும் தனியே வந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.

இது அப்பெண்ணின் கணவரின் குடும்பத்திற்கு தெரியவரவே அவர்களை கண்டித்துள்ளனர் நிலையில் ஆத்திரமடைந்த அப்பெண் தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் வெளியூர்க்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்துள்ளனர். அப்போது தன் மனைவியை காணவில்லை என அவரது கணவர் தேடிய நிலையில் இருவரும் தங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என மனமுடைந்து பேருந்து நிலையத்திலேயே தங்களை ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.