17 வயது கர்ப்பிணி மகளை கொடூரமாக ரேப் செய்து கொன்ற தந்தை! 5 வருடத்திற்கு பிறகு நிரூபணமான உண்மை!

ராஜஸ்தான் மாநிலத்தில் சொந்த மகளையே கற்பழித்து கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 17 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்தது அவரது தந்தை தான் என்பதை உறுதி செய்து அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் போது இளம்பெண் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர் என்பதை உறுதிசெய்தனர்.

இதையடுத்து அப்பெண்ணின் தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் அப்போது அவரது தாயார் கூறியதாவது தனது கணவர் மகளை பலமுறை பலவந்தமாக கற்பழித்துள்ளார் எனவும் அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டிள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அப்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவரது தந்தை தான் மகளை கற்பழித்து கொலை செய்ததை டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிசெய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பானது தற்போது வழங்கப்பட்டது. அதில் சொந்த மகளை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக அவரது தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சொந்த மகளையே கற்பழித்து கொலை செய்த தந்தையின் செயல் மிகவும் அநாகரிகமான செயலாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.