பகவான் ஸ்ரீராமரின் வாரிசு நான்! அவரது மகன் குஷாலின் வழித்தோன்றல்! தெறிக்கவிடும் தியா குமாரி!

ராஜஸ்தானைச் சேர்ந்த அரச வம்சத்தினரும் அரசியல்வாதிகளும் தங்களை ராமரின் சந்ததிகள் என்று கூறிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அயோத்தி ராமஜென்ம பூமி என்ற இரண்டரை ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அயோத்தியில் ராமன் சந்ததிகள் இன்னும் வாழ்கின்றனர் என்று கேள்வி எழுப்பினர்.

அப்படி ராமரின் சந்ததிகள் வாழும் பட்சத்தில் அது குறித்து தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த அரச வம்சத்தினரும் காங்கிரஸ் மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்களும் தங்களை ராமரின் சந்ததிகள் என்று பிரகடனப்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் அரச குடும்பத்தினர் தங்களை ராமரின் நேரடி சந்ததிகள் என்று கூறிக் கொள்கின்றனர். அந்த மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள பிரதாப் சிங் என்பவர் தாம் ராமரின் வழித்தோன்றல் என்று தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் இதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். தங்கள் குடும்பத்தினர் அனைவரும் ராமரின் சந்ததிகள் என்றும் அவர்கள் உலகின் பல மூலைகளில் வசிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மரபணு சோதனையின் மூலமும் இதனை நிரூபிக்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு அயோத்தி நிலத்தின் மீது எந்த ஆசையும் இல்லை என்று கூறியுள்ள பிரதாப் சிங், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியாக வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவரைப்போல் பாஜக பிரமுகரும் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான தியா குமாரி, தாம் ராமரின் மகன் குஷாவின் வழித்தோன்றல் என்றும் ராமரின் சந்ததிகள் உலகம் முழுவதும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அயோத்தி வழக்கில் விரைவில் தீர்வு காணப்பட்டு தடைகள் நீங்கி அங்கு ராமர் கோயில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்