அமைச்சர்கள் வாய் திறந்தால் மக்களுக்கு நல்ல நல்ல செய்திகள் கிடைக்கும் என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது அமைச்சர்கள் வாயைத் திறந்தாலே வசவுகள்தான் கொட்டுகிறது. அதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் ராஜேந்திர பாலாஜி.
டெல்லியில் இருக்கும் பன்னி! எம்.பி.யை சுட்டுத்தள்ள உத்தரவு போட்ட ராஜேந்திர பாலாஜி! வேடிக்கை பார்க்கும் எடப்பாடி!
மோடி எங்கள் டாடி என்று சொந்த அம்மாவையே கேவலப்படுத்திய ராஜேந்திர பாலாஜி நேற்று காங்கிரஸ் எம்.பி.யை பேசிய பேச்சுக்கள் அச்சச்சோ ரகம். ஒரு எம்.பி. என்றும் பார்க்காமல் அவன், இவன் என்று போட்டுத் தாக்கிவிட்டார்.
அவன் தொகுதிப்பக்கமே வர்றதில்லை. அந்தப் பன்னி இந்தப் பக்கம் வந்தா விடாதீங்க. பன்னியை சுடுற துப்பாக்கியை வைச்சு சுட்டுத் தள்ளுங்க. ஓட்டு கேட்கிறதுக்கும் வரலை, நன்றி சொல்றதுக்கும் வரலை. பொண்டாட்டி, பிள்ளையோட அவன் டெல்லியில இருக்கான்.
இப்ப நாங்குநேரியில நிற்கிறதுக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க. அனேகமா டெல்லியில் இருந்துதான் வந்து நிப்பாட்டுவான்னு நினைக்கிறேன். ரப்பர் குண்டு வச்சு வயித்துலேயே அடிங்க என்று வன்முறையைத் தூண்டும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
காவல் துறையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிந்துள்ள காங்கிரஸ் அடுத்தகட்டமாக போராடவும் தயாராக இருக்கிறது. இதையெல்லாம் எடப்பாடி ரசித்துக் கேட்கிறாரா..? இதற்குத்தானா அமைச்சர்கள்..?
ஜெயலலிதா ஏன் அமைச்சர்கள் வாயில் பிளாஸ்திரி போட்டிருந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது.