எல்லா ஏரியாலயும் CSK தான் மாஸ்! ராஜஸ்தான் அணியை தடுமாற வைத்த சென்னை அணி !

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட் செய்து 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

இதனால் அந்த ஆனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கமுடியவில்லை. ராஜஸ்தான் ராயல் அணியில் பெண் ஸ்டோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தீபக் சஹர், ஜடேஜா, ஷார்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.