சன் ரைசர்ஸ் அணியை கதற வைத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ipl போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 37 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 61 ரன்களையும் குவித்தார். பின்னர் களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி ஆட்டமிழந்தனர் .இதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 160 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் லிவிங்ஸ்டோன் 44 ரங்களையும், ரஹானே 39 ரங்களையும் முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து அடித்தனர். பின்னர் களமிறங்கிய சாம்சன் அவுட் ஆகாமல் 48 ரன்களை எடுத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார்.