தலித் நிலங்களை அபகரித்தவன் ராஜராஜ சோழன்! பா ரஞ்சித்தின் ஜாதிய வன்மம்!

ராஜராஜசோழனை எல்லோரும் அரசனாக, மாபெரும் கோயிலை நிர்மாணம் செய்தவராக பார்த்துவரும் நேரத்தில், அவரை ஜாதி ரீதியாக அடைக்கும் முயற்சிகள்தான் இப்போது நடைபெற்று வருகிறது.


அதற்கு பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தும் பலியானதுதான் சோகம் என்கிறார். இன்று ராஜராஜ சோழன் பற்றி பேசியிருக்கும் ரஞ்சித், ‘என் நிலங்களை பிடுங்கியது ராஜராஜன்,அது போல தேவதாசி முறையை உருவாக்கியவன் ராஜராஜன் அது ஒரு இருண்ட கால ஆட்சி’ என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சின் உள்நோக்கம் இன்று ராஜராஜனை உரிமை கொண்டாடும் ஜாதிகளுடனான மோதலை தூண்டுவதற்கும் ஒரு வெறுப்பை விதைப்பதற்குமே பேசப்பட்டதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ராஜராஜனின் ஆட்சி பொற்காலமா? இல்லையா என்பதை இன்றைய ஜனநாயக விழுமியங்களோடு ஒருவர் பொறுத்திப் பார்த்து பேசுவது அபத்தம்.அன்றைய சூழ்நிலையில் உலகத்தில் இயங்கி வந்த எந்த பேரரசுகளோடும் ஒப்பிட்டு பேசினால் சரி.அன்றைய பொருளாதார நிலை,சமூக ஒழுக்கம்,பெண்களின் வாழ்வு,மனித அடுக்கு முறைகள் பற்றி பேசினால் சரியாக இருக்கும்.

அதிலும் அபத்தமாக நிலங்கள் பிடுங்கப்பட்டதாக எந்த தரவும் இல்லாமல் தன் கற்பனையை அடித்துவிடுகிறார் ரஞ்சித்.இப்படி எந்த தரவுகளும் இல்லாமல் போகிற போக்கில் ராஜராஜனை விரோதியாக கட்டமைப்பதன் நோக்கமென்ன? குறுகிய ஜாதிய வெறுப்பு அரசியலுக்கு ஒரு மாமன்னனை,தமிழர்களின் மிகப்பெரும் அடையாளத்தை உடைத்து வீச நினைப்பதா?

தமிழர்களின் ஒப்பற்ற அடையாளங்கள் எல்லாம் இப்படித்தான் மெல்ல உடைக்கப்படுகின்றன கருத்தியல் ரீதியாக.இதில் உளவியல் ரீதியாக நாம் தோல்வியடைய திராவிடமும் நம்மை பயிற்றுவித்திருக்கிறது. ரஞ்சித்திடம் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான் உங்களுடைய நவீன ஜாதிய அரசியலுக்குள் ராஜராஜனை எல்லாம் இழுக்காதீர்கள்.சமூகத்தில் நஞ்சை பரப்பாதீர்கள்.