ஒரே ஒரு காட்சிக்கு ரூ.45 கோடி பட்ஜெட்! பாகுபலி ராஜமவுலியின் அடுத்த பிரமாண்டம்!

ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்தில் 45 கோடி ரூபாய் செலவில் ஒரு காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மாவீரன், பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜமவுலி இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மிகப் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்ற இவர் அடுத்ததாக ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் வேகமாக தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இதில் உச்சக்கட்ட சண்டை காட்சி ஒன்று இருப்பதாகவும் இதற்காக 45 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சண்டை காட்சியை மட்டும் இரண்டு மாதம் வரை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2000 பேர் உடன் ஜூனியர் என்டிஆரும்  ராம் சரணும் சண்டை போட உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

இந்தக் காட்சியை படமாக்குவது குறித்து சுமார் ஆறு மாத காலமாக படக் குழு தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறது. படத்தின் மிக முக்கிய ஒரு அம்சமாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.