சரிவரலைனா மாத்திடுவேன்னு மிரட்டுனார்! பீதி கிளப்பும் ராஜா ராணி அர்ச்சனா!

சென்னை: ''சரியா நடிக்கலன்னா டிவி சீரியலில் இருந்து மாத்திடுவேன்,'' என்று தயாரிப்பாளர் மிரட்டியதாக, ஸ்ரீதேவி புகார் கூறியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து அசத்தியவர் ஸ்ரீதேவி. அந்த சீரியல் முடிவடைந்த நிலையில், வேறு எதிலும் புதியதாக கமிட் ஆகாமல் அவர் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.   

அதில், ''சீரியல் முடிந்த பிறகுதான், என்னால் தனிப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிகிறது.  சீரியலில் நடிக்க ஒப்பந்தமான நாள் முதலாக, அது முடியும் வரை, ஒருவித பதட்ட மனநிலையிலேயே இருந்தேன். சரியாக நடிக்கலன்னா, என்னை மாற்றிவிடுவதாக, ராஜா ராணி சீரியல் தயாரிப்பாளர் மிரட்டுவார்.

இதை ஒரு சவாலாக வைத்துக் கொண்டு, அந்த சீரியலில் நடித்தேன். இதற்கிடையே, 2017ம் ஆண்டில் எனது கணவர் அசோக்கை முதன்முதலாக டாக் ரெஸ்கியூ நிகழ்ச்சி மூலமாக சந்தித்தேன். அப்படியே நெருங்கிப் பழக தொடங்கிய நாங்கள், ஒருகட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம்.

ராஜா ராணி சீரியல் முடிந்த கையோடு நாங்களும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், ரகசிய திருமணம் செய்துகொண்டதுபோல பலரும் தகவல் பரப்பி வருவதால்தான் ஊடகங்களில் பகிரங்கமாக இதனைச் சொல்ல தீர்மானித்தோம் ,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.