கல்யானத்துக்கு முன்பே ஹனீமூன்! ராஜா ராணி செம்பாவின் இன்டிமேட் போட்டோ வெளியானது!

கல்யானத்துக்கு முன்பே ராஜா ராணி சீரியல் செம்பா ஹனிமூன் சென்றுள்ளார்.


மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் அல்யா மனாசா. மேடை நடனக் கலைஞராக இருந்த இவர் மானாட மயிலாட மூலமாக சின்னத்திரை அறிமுகம் கிடைத்த பிறகு பிரபலம் ஆனார். அப்போது மனஸ் என்பவரை அல்யா காதலித்தார். இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.

   இந்த நிலையில் தான் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அல்யாவுக்கு கிடைத்தது. அந்த சீரியலில் செம்பா எனும் கேரக்டரில் அல்யா நடித்தார். அதன் பிறகு அல்யாவின் பெயர் செம்பாவாகவே மாறியது. ராஜா ராணி சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற செம்பா தான் தற்போது சீரியல் நடிகைகளில் டாப். பெண் ரசிகைகள் மட்டும் இல்லாமல் செம்பாவுக்கு ஆண் ரசிகர்களும் ஏராளம்.

   இதனால் செம்பாவுக்கு தற்போது விளம்பர பட வாய்ப்புகள் கொட்டுகின்றன. சரவணா ஸ்டோஸ் நிறுவனத்தின் ஆஸ்தான விளம்பர மாடலாக செம்பா தற்போது இருக்கிறார். இப்படி பெயர், பணம்,புகழ் கிடைத்த பிறகு தனது பழைய காதலன் மனசை கழட்டிவிட்டுவிட்டு ராஜா ராணி சீரியலில் தனக்கு கணவனாக நடிக்கும் சஞ்சிவை காதலிக்க ஆரம்பித்தார் செம்பா.

   திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். லிவிங் டுகெதர் முறையில் செம்பா – சஞ்சீவ் காதல் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் திருமணத்திற்கு எல்லாம் தற்போது வாய்ப்பே இல்லை என்பது போல் அவர்கள் இருவரும் ஹனிமூனுக்கே சென்றுவிட்டனர்.

  புத்தாண்டை வரவேற்க இருவரும் தேர்ந்தெடுத்த ஊர் கொடைக்கானல். கொடைக்கானலில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இருவரும் ஜோடியாகவே வலம் வருகின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள்  சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. புத்தாண்டு கொண்டாடத்தான் கொடைக்கானல் சென்றதாக செம்பா – சஞ்சீவ் கூறினாலும் அங்கு அவர்கள் ஹனிமூனைத் தான் என்ஜாய் செய்கிறார்கள் என்கிறது ராஜா ராணி டீம்.