சென்னையில் கொட்டப்போகுதாம் மழை! நார்வே சொன்னா பலிக்குமா?

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தை மழை வந்து தீர்க்கப்போகிறது என்று நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நார்வே கணக்குப்படி, சென்னையில் 13-ம் தேதி மாலை முதல் இரவு 11 மணி வரை வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யப் போகிறதாம். இரவு நள்ளிரவுக்குப் பிறகு தொடங்கும்  மழை அடுத்த நாள் காலை 5 மணி வரை தொடருமாம். 

அதேபோல் 15-ம் தேதி மாலையும் 5 மணி முதல் அடுத்த நாள் 16-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யப் போகிறதாம். இதே நிலை 17-ம் தேதி வரை நீடிக்கிறது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதை நம்பமுடியாத நிலையில், நார்வே நாடும் சொல்லியிருப்பதால் தண்ணீர் பஞ்சம் தீரும் என்றே நம்புவோம். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தென்மேற்கு பருவமழையில் இடைவெளி விட்டுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் நாளை முதல் டமால் டுமீல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்