ச்சீ ச்சீ..! பெண் இன்ஸ்பெக்டர் செய்யுற வேலையா இது? காவல்துறையை களங்கப்படுத்திய கயல்விழி! எப்படி தெரியுமா?

சென்னையில் இரவு நேரங்களில் இரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் இருந்து நகை பணம் திருடும் நபர் கடந்த மே மாதம் கைது செய்யபட்டார்.


கைது செய்யப்பட்ட நபர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதிதை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், இதுவரை சுமார் 110 சவரன் நகை மற்றும் 15 ஏ.டி.எம் கார்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் புழல்  சிறையில் அடைக்கபட்டதை அடுத்து , இரயில்வே போலீஸ் அதிகாரி கயல்விழி காவல் துறையிடம் 13 கார்டுகள் மட்டுமே சமர்பித்துள்ளார்.மீதமான 2 கார்டுகள் குறித்து கேட்டதற்கு தனக்கு தெரியாது என மழுப்பி விட்டார்.

இதற்க்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாகுல் ஏ.டி.எம் கார்டு மூலம் சுமார் இரண்டரை இலட்சம் பணம் வரை எடுத்துள்ளதாக , சம்மந்தபட்ட பேங்க் தகவல் கொடுக்க , சம்பவத்தன்று குறிப்பிட்ட சி.சி.டி.வி காட்சிகள் மூலம் இரயில்வே போலீஸ் அதிகாரி கயல் விழி இதில் சம்மந்த பட்டது தெரிய வந்தது .

மேலும் இது குறித்த விசாரணை யின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட கயல்விழி, மீது இரயில்வே துறை  சார்பில் அறிக்கை சமர்பிக்கபட்டதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கபட உள்ளது.