எனக்கு பதில் புதிய தலைவரை தேடுங்கள்! ராகுல் போட்ட பகீர் உத்தரவு! அதிர்ந்த நிர்வாகிகள்!

காங்கிரஸ் தலைவருக்கு வேறு பொருத்தமான நபரை தேடித்தருமாறு மூத்த நிர்வாகிகள் 2 பேரிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கேரளா மற்றும் தமிழகத்தில் மட்டும் தான் அந்தக் கட்சியால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. சுமார் 51 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் என்ற நிலையில் இந்த முறையில் அக்கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்காமல் போய்விட்டது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே ராகுல் காந்தி முன்வந்தார். இதுகுறித்து கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி தீவிரமாக விவாதித்து. அப்போதும்கூட தலைவர் பதவியிலிருந்து விலக முடிகள் ராகுல் காந்தி மிக உறுதியாக இருந்தார். ஆனால் இதனை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிகள் ராகுல் காந்தி தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய எம்பிக்களை சந்திப்பது மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ராகுல்காந்தி இன்று ரத்து செய்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டியலை நேரில் அழைத்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை என்று ராகுல் காந்தி அப்போது அகமது படேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதைப்போல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபாலையும் நேரில் அழைத்து ராஜினாமா முட்டைகள்தான் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தன் பொறுப்புகளை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் பொருத்தமான காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்து கொடுக்குமாறு அகமது பட்டேல் மற்றும் கேசி வேணுகோபாலிடம் ராகுல் காந்தி உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் ராகுல் காந்தியை சமாதானம் செய்வது எப்படி என்று தெரியாமல் காங்கிரஸ் உயர்மட்ட நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

அதேசமயம் தனது குடும்பத்தினர் அல்லாத ஒருவரை காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.