கர்மா உங்களை சும்மா விடாது! பாய்ன்ட் பிடித்து மோடியை மிரட்டும் ராகுல்!

தேர்தல் பிரசாரத்தில் எதையெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் மோடி பேசி வருகிறார் என்று இதுவரை ஆறு முதல் தேர்தல் கமிஷனில் முறையிடப்பட்டு, அத்தனை முறையும் கமிஷன் மோடியை நல்லவர் என்றே சொல்லிவிட்டது.


இந்த நிலையில் திடீரென தேர்தல் பிரசாரத்தின்போது மோடி யாருமே எதிர்பாராத வகையில், ராஜீவ்காந்தியின் மரணத்தை கொச்சைப்படுத்திப் பேசினார். இந்த விவாதம் நாடெங்கும் பெரும் எதிர்ப்பலையை  ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு இன்று ராகுல்காந்தி பதில் அளித்திருக்கிறார்.

போட்டி முடிந்துவிட்டது. இனி நீங்கள் கர்மாவை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று மட்டும் பதில் ட்வீட் செய்திருக்கிறார். இந்த பதில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மோடியை என்றைக்கு கட்டிப்பிடித்தாரோ, அன்று முதல் மோடியின் கிராப் இறங்கிவருகிறது.

இந்த நிலையில், ராகுலின் இந்தப் பதிலைக் கேட்டு பா.ஜ.க.வினர் கொந்தளித்து வருகின்றனர். இந்த விவகாரமும் தேர்தல் கமிஷனுக்குப் போகிறதாம்.