மருத்துவர்களை சந்தித்த ராகுல் காந்தி… எங்கே போனார் மோடி..?

இரவு 8 மணி என்றாலே மக்கள் அலறவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பண நடவடிக்கை தொடங்கி, அவர் கொடுக்கும் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களுக்கு சிக்கலைத்தான் உருவாக்குகிறதே தவிர, இனிமையான அறிவிப்பு எதுவும் வந்தது இல்லை.


இந்த நிலையில், இன்று உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. அரசுத் துறையினர் களம் இறங்கியுள்ளனர் என்றாலும், இப்போது முழுக்க முழுக்க மருத்துவர்கள் கையில்தான் இந்த உலகம் இருக்கிறது. அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை.

இந்த நேரத்தில், மருத்துவர்களை சந்தித்து, அவர்களுடைய அயராத பணிக்கு நன்றி தெரிவித்து உடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் ராகுல் காந்தி. மேலும், இரண்டுமணிநேரம் அந்த மருத்துவமணையின் தேவைகள் சேவைகள் குறித்து கேட்டு அறிந்து, தேவையான உதவிகளை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.

கொரோனா அச்சமின்றி மருத்துவர்களை நேரில் சந்தித்திருக்கும் ராகுல் காந்தி, இனியாவது அரசியலில் தீவிரமாக களம் இறங்கி மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். செய்வாரா ராகுல்..? மோடியும் இப்படி களம் இறங்கினால்தான் மக்களும் திருப்தி அடைவார்கள்.