ராகுல் தமிழகத்துக்குப் பராக்... காங்கிரஸ் கூட்டணி நிலைத்துநிற்குமா?

மார்ச் முதல் வாரம் தமிழகத்திற்கு ராகுல் காந்தி வருகிறார் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் வாங்குவதுதான் இந்த வருகையின் நோக்கம் என்கிறார்கள்.


பொதுவாக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழகம் வருவார்கள். அப்படியொரு அவப்பெயர் சோனியாவுக்கும் ராகுலுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது தி.மு.க. வலிமையான கட்சியாக மாறியிருக்கும் நிலையில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சீட் வாங்க வேண்டும் என்றால், ராகுல் அடிக்கடி வரவேண்டும் என்று கூறப்பட்டதாம்.

பொதுவாகவே கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாத ராகுல், இந்த முறை தமிழகம் வருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, தன்னை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிலைப்படுத்தியது.

அடுத்தது, தமிழகத்தில்தான் குடியுரிமை திருத்தச்சட்ட போர் அதி தீவிரமாக நடந்துவருகிறது. ஆகவே, இந்த நேரத்தில் தமிழகம் வந்து ஸ்டாலின் நட்பை புதுப்பிப்பதுடன், இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாக நிற்பதைக் காட்ட நினைக்கிறாராம்.

எப்படியோ ராகுல் வந்தா சரிதான் என்று கல்லூரி மாணவிகள் வரிசைகட்டி நிற்கிறார்களாம்.