பாரத மாதாவிடம் மோடி கூறுவது பொய் என ராகுல் புகார் ! பாஜக பதிலடி !

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரத மாதாவிடம் பொய் சொல்வதாக வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை அடைத்து வைக்க நாட்டில் தடுப்புக் காவல் மையங்கள் இல்லை என பிரதம கூறுவதன் மூலம் அவர் பொய் சொல்கிறார் என தெளிவாக தெரிவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் பிரதமா் பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் என்றும் சாடியுள்ளார் ராகுல்காந்தி. ‘இஸ்லாமியர்கள் தடுப்புக் காவல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற வதந்தியை காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளும் பரப்புகின்றன’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டும் காணொலி ஒன்றை ரால்காந்தி பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், அஸ்ஸாமில் கட்டமைக்கப்படுவதாகக் கூறப்படும் தடுப்புக் காவல் மையம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள பாஜக, ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும், தடுப்புக் காவல் மையங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. பொய்கள் பேசுவதில் வல்லவா் ராகுல் காந்தி. முதலில் ரஃபேல் விவகாரத்தில் பொய் பேசி பின்னர் உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டார்.

அடுத்தது தற்போது தடுப்புக் காவல் மையங்கள் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியி இருந்தபோதுதான் 3 தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட்டன. ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது. அவரது விமா்சனப் பேச்சுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கோ எதிரானது அல்ல.

அனைத்தும் பிரதமா் மோடிக்கு எதிரானது. இதற்கு ஆதாரமாக அஸ்ஸாம் மாநிலத்தில் தடுப்புக் காவல் மையங்கள் அமைப்பதற்காக 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்ட அறிக்கையும் பாஜக வெளியிட்டுள்ளது.