ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானேவிற்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது IPL நிர்வாகம்.
ரஹானேவிற்கு ரூ12 லட்சம் அபராதம்! IPL நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. பந்து வீச்சை தேர்வு செய்த ராஜஸ்தா ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. IPL விதிப்படி அதிக நேரம் பந்து வீச எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானேவிற்கு ருபாய் 12 லட்சம் அபராதமாக IPL நிர்வாகம் விதித்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 175 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இது வரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிக்கு போராடி தோல்வியை தழுவியுள்ளது. இந்த சோகத்தில் இருக்கும் ரஹானேவிற்கு அபராதம் இன்னொரு சோதனையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.