சென்னை மாணவிகளை மயக்கிய ராகுல்! காங்., ஹேப்பி! அலறும் பாஜக!

தன்னை ராகுல் என்றுதான் அழைக்கவேண்டும் என்று மாணவிகளிடம் ராகுல் அன்புக் கட்டளை போட, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் அத்தனை பேருக்கும் சந்தோஷமோ சந்தோஷம், ஒரு மாணவி வெட்கத்தால் முகம் சிவந்து போனார்.


கடந்த தேர்தலின்போது மக்களை மயக்கும் வேலைகளை நரேந்திர மோடி செம கச்சிதமாக செய்துகொண்டு இருந்தார். ஆனால், இந்த முறைஅதனை ராகுல்காந்தி கையில் எடுத்துக்கொண்டார். கல்வியை முழுமையாக தனியார் மயமாக்கக்கூடாது என்று ஒரு மாணவியின் கேள்விக்கு பதில் சொன்னார். 

ராகுல் சார் என்றுகூட அழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் ராகுல். பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் தமிழ்நாடு சூப்பர் என்று சர்டிஃபிகேட் கொடுத்தார். மேலும் தன்னை சார் என சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டததை தொடர்ந்து கேள்வி கேட்ட மாணவி, ஹாய் ராகுல் என்று கூறி வெட்கத்தால் முகம் சிவந்தார்.

ஆண்களைவிட பெண்கள் உயர்வானவர்கள் என்பதால், சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றார். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறிவிட்டதாகத் தெரிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, அது குறித்து மாணவிகளிடம் இருந்தே கெட்டது என்று பதில் வாங்கி தன்னுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டினார். ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இரண்டும் இந்திய பொருளாதாரத்தை குலைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்திய வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவதற்குத்தான் மோடி உதவி செய்தார். இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று நேரடியாக நரேந்திர மோடியை தாக்கிவிட்டார்.

மாணவிகள் மத்தியில் பேசினால், அது குடும்பம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதை அறிந்துகொண்டு, மிகத் தெளிவாக காய் நகர்த்தியிருக்கிறார் ராகுல். இந்த நடவடிக்கைகளைக் கண்டு காங்கிரஸ் கட்சி மிகவும் ஆனந்தமாகியுள்ளது. ராகுல் அதிரடியைக் கண்டு பா.ஜ.க.வும், அ.தி.முக.வும் அலறிப்போயுள்ளன.