அன்னையர் தினம்! ஒரே ஒரு செயலில் அனைவரையும் நெகிழச் செய்த ராகவா லாரன்ஸ்!

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் மூத்த குடிமக்களை அவர்களது பிள்ளைகள் கைவிட்டுவிடக் கூடாது என பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.


காஞ்சனா 3 திரைப்படம் பெரிய  வெற்றியை பெற்றுள்ள நிலையில் அதன் இந்தி ரீமேக்கை டைரக்ட் செய்யும் பணிகளில் ராகவா லாரன்ஸ் பிசியாக உள்ளார். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கையாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். 

திரைப்படப் பணிகளுக்குஅப்பால் சமூக சேவை மற்றும் தாய்க்கு மரியாதை கொடுக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் பெயர் பெற்றாவர். அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய் என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மன நலம் சரியில்லாதஒரு தாய் தன்னிடம் வந்து ஏன் என்னை விட்டுட்டூப் போயிட்ட? என கேள்வி எழுப்பியதாகக் கூறும் லாரன்ஸ், இதனால் தான் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்தப் பெண் தன்னைக் கடந்து சென்று அடுத்தடுத்து இருந்தவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்டது தன்னை பதறச் செய்துவிட்டதாத் தெரிவிக்கிறார். 

அப்போது எடுத்த முடிவின் படி முதியவர்களை தனியாக விட்டுவிடாதீர்கள் என பிரச்சாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் ஒரு சிலராவது திருந்தினாலும் மகிழ்ச்சி என்றும் கூறுகிறார் அவர் . தனது தாய் நிகழ்ச்சி குறித்த பாடலுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், விரைவில் அதே பாடலுக்கு நடனத்துடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.