ரேடியேட்டரில் பிடித்த தீ! குபுகுபு புகை! திடீரென வெடித்த டாடா ஏஸ்! 2 கிமீ அதிர்ந்தது! துடிதுடித்து பலியான 3 பேர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டாசு ஏற்றி வந்த வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வானத்தில் இருந்த பட்டாசு வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பட்டாசு லோடு ஏற்றி வந்த வாகனம் காலை 8 மணியளவில் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது வடவனூர் அருகே வாகனத்தின் ரேடியேட்டரில் இருந்து புகை வருவதை அறிந்த ஓட்டுநர் வாகனத்தை ரோட்டோரத்தில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் நிறுத்தியுள்ளார்.

பின்னர் பஞ்சர் கடை உரிமையாளரிடம் வாகனத்திற்கு ஊற்ற தண்ணீர் தரும்படி கேட்டுள்ளார். இந்நிலையில் தண்ணீரை வாகனத்தில் ஊற்றிவிட்டு இருவரும் சிறிது நேரம் சகஜமாக பேசியுள்ளனர். இதையடுத்து பஞ்சர் கடை உரிமையாளர் ஜனார்த்தனன் பட்டாசு லோடு ஏற்றி வந்த வாகனத்தின் பின்னால் தீப்பற்றி எரிவதை கவனித்துள்ளார்.

இதையடுத்து தங்களது வாகனத்தில் என்ன லோடு ஏற்றி வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அதற்கு ஓட்டுனர் பட்டாசு லோடு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஜனார்தனன் தனது இருசக்கர வாகனம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அருகில் இருந்து அப்புறப்படுத்த தொடங்கினார். பின்னர் பட்டாசு லோடு ஏற்றி வந்த வாகனம் திடீரென வெடித்துச்சிதறியது.இந்த வெடி விபத்தில் 2 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சுமார் அரை கிலோமீட்டர் வரை பட்டாசு வெடித்ததில் தாக்கம் காணப்பட்டது அருகிலிருந்த பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தது மற்றும் வீடுகளில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதையடுத்து உடனே தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்களில் வீராச்சாமி ஃபயர் வொர்க்ஸ், புதுச்சேரி அடியாள் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து புதுச்சேரி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர் என்பது காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

மற்றும் வாகனம் முற்றிலும் வெடித்து சிதறிய நிலையில் அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனம் எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு காரணமாக இருந்த பட்டாசு கம்பெனி உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.