வாந்தி வாந்தியா எடுக்குறார்! திருந்தவே இல்லை! விஷால் மீது நடிகை ராதிகா பகீர் புகார்

நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், விஷாலை கன்னாபின்னவென்று திட்டி வரலட்சுமி சரத்குமார் இன்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.


ஒரு காலத்தில் ஒண்ணுமண்ணா கிடந்தவங்க என்று சினிமா உலகமே டென்ஷன் ஆனது. இந்த நிலையில் இப்போது ராதிகாவும் விஷாலுக்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சரத்குமார் எதையும் செய்யவில்லை என்று மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியையே வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது, பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்து இருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகி விடுமா?

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு, கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா? என்று விளாசியிருக்கிறார்.

இனியாவது விஷால் அடக்கத்தோடு செயல்பட முயல வேண்டும் என்று ராதிகா சரத்குமார் கோபமாகி இருக்கிறார். அடுத்து யாருப்பா சரத்குமாருக்காக வக்காலத்து வர்றது, சீக்கிரமா வாங்கப்பா..