வாய்க்கொழுப்பு ராதாரவி! முதல் நாளே வில்லங்கம்! நறநற எடப்பாடி!

பத்து நிமிசம்கூட கட்சி பேனர் இல்லாம இருக்கமுடியாது என்ற அளவுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள ஆசாமிகளில் ஒருவர் நடிகர் ராதாரவி.


நடிகை நயன்தாராவை எசகுபிசகாக பேசியதால் தி.மு.க.வில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். எப்படியாவது தேர்தலுக்குள் கட்சிக்குள் நுழைந்துவிடலாம் என்று நினைத்து முடியாமல் போகவே, இப்போது அ.தி.மு.க.வில் சாய்ந்துவிட்டார். பத்திரிகையாளர்கள், மீடியாவுக்கு அ.தி.மு.க. சார்பில் யாரும் பேட்டி தரக்கூடாது என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று பேட்டி கொடுத்தார் ராதாரவி. அப்போது அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும்போது கட்சியில் சேரலாமா என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ராதாரவி, ‘இப்போ சேர்ந்தா என்ன? சினிமாவுல கடைசி நேரத்துல ஹீரோ வந்து காப்பாத்துவாரே, அப்படி வந்திருக்கேன்’’ என்று சொன்னவர், பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு, ‘இப்ப யாரும் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க’ என்றபடி நடிகர் சங்க மேட்டருக்குப் போனார். விஷால் அணி முழுக்கமுழுக்க தி.மு.க. அணி என்று முத்திரை குத்திய ராதாரவி, அதை எதிர்க்கத்தான் பாக்கியராஜ் தலைமையில் ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.  ஆனால், இவர் தலைவராக இருந்தபோது கட்சி முத்திரை இல்லையாம்.

ம்.. வந்த முதல் நாளிலே அ.தி.மு.க.வுக்கு ஹீரோன்னு வாய்க் கொழுப்பைக் காட்டிட்டாரு என்று எடப்பாடி பழனிசாமியிடம் யாரோ, பற்றவைக்க, கடுப்பாகிவிட்டாராம். அதுசரி, வாயை மட்டும் ராதாரவி தனியா கழட்டி வைச்சிட்டா வர முடியும்.