பாகுபலி நடிகருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை! புது கிட்னி கொடுத்த பெண்மணி யார் தெரியுமா?

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் ராணா டகுபதி. இவருக்கு தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நடிகர் ராணா டகுபதி பல முன்னணி படங்களில் நடித்து பெரும் புகழை அடைந்துள்ளார்.  அதிலும் அவரது நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் பெரும் பிளாக்பஸ்டர் ஹிட்- ஐ திரை உலகிற்கு அளித்தது என்றே கூற வேண்டும்.

இத்தகைய சிறப்புமிக்க நடிகர் கடந்த சில காலமாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட வந்துள்ளார்.  சிறுநீரகத்தில் சோடியம் அளவு அதிகரித்ததால் இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து உள்ளது. இவரை பரிசோதித்த  மருத்துவர்கள் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.  

இதனையடுத்து நடிகர் ராணாவின் தாயார் திருமதி. இலட்சுமி அவர்கள் தன்னுடைய சிறுநீரகம் ஒன்றை தன்னுடைய மகனுக்கு தானமாக வழங்கியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை அமெரிக்காவில் சிக்காகோ நகரில்  உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது நடிகர் ராணா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவருடைய  குடும்பத்தினர் கூறியுள்ளனர் . 

அறுவை சிகிச்சையை தொடர்ந்து நடிகர் ராணா சுமார் ஒரு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் . ஆகவே நடிகர் ராணா தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குணமான பின்பு தன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"விரத  பர்வம்" என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகர்  ராணாடகுபதி, வரும் செப்டம்பர் மாதம் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.