அடுத்து பசிப்பிணி வரப் போகிறதா....? ஊரடங்கு எச்சரிக்கை.

ஊரடங்கு விலக்கப்படவில்லை என்றால் உணவு சிக்கல் ஏற்படலாம் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்றவேண்டும். அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். 

இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும். பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை.அதனால் பொதுச்சமூகம் அறியாமல் இருக்கிறது.

உற்பத்தித்துறையினர் மட்டுமல்ல; சேவைத்துறைப் பணியாளர்கள் அவர்களின் பணிக்குத் திரும்ப வேண்டும். அதற்கும் முன்பாகப் பணிக்குப் போக இருக்கும் நபர்களுக்குத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பரிசோதனைகள் செய்யும் கருவிகளையும் கொண்டுவரவேண்டும்..

ஊரடங்கு தளர்த்தியவுடன் செய்ய வேண்டிய முதல் பணிகளில் ஒன்று விழிப்புணர்வுப் பரப்புரையை ஆரம்பிப்பது என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் ராமசாமி. கொரோனாவைப்பற்றி தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மணித்துளியும் இதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். என்றாலும் இவையெல்லாம் அதன் சரியான அர்த்தத்தில் போய்ச்சேரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.